கீதங்களும் கீர்த்தனைகளும்

Aarana Thirithuvamae – ஆரணத் திரித்துவமே

ஆரணத் திரித்துவமே – Aarana Thirithuvamae பல்லவி ஆரணத் திரித்துவமே,-எமைஆண்டருள், மகத்துவமே. அனுபல்லவி பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,பொன்னுலகத்தெழும் உன்னதமானபோத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே, நித்திய – ஆரண சரணங்கள் 1. அன்றன்றை அப்பத்தைத் தாரும்;-எங்கள்ஆபத் தனைத்தையும் தீரும்;இன்றும் என்றெங்களைச் சேரும்;-திருஇரக்கத்தால் முகம் பாரும்;நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்;நம்பரா, கருணாம்பரா,ஞானத் தனு மானத்தொளிர்மேன்மை திவ்விய பானத்தருள். – ஆரண 2. மூவர் ஒன்றான யெகோவா,-உயர்முக்ய கிருபையின் தேவா,மேவி அடியாரைத் தேவா,-பலவெவ்வினையினின்றும் கா, வா;பாவிகள் நாங்கள் […]

Aarana Thirithuvamae – ஆரணத் திரித்துவமே Read More »

Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங்

கள்ளமுறுங் கடையேனுங் – Kallamurung Kadaiyeanung 1.கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங் கருணைவெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சன நிதியைஉள்ளமுவப் புறுதேனை உயிர்க்குயிரை உலவாததெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே. 2.படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர்திருமடிசாய்த்த திருமேனி வதைந்திழிசெங் குருதியுகமுடிசாய்த்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக்கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே. 3.மூவினைக்கு மும் முதலாய் மும்முதலு மொரு முதலாந்தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்நாவினைக்கொண் டேத்தரிய நல்லறத்தின் தனித்தாயைத்தீவினைக்கோர் அருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே. 4.மூவாத முதலவனை முதுசுருதி மொழிப் பொருளைஓவாத பெருங்குணத்த உத்தமனை

Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங் Read More »

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi பல்லவி ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! -ஐயையா 2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! -ஐயையா 3. ஆகாத லோகத்தின்

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி Read More »

Samayamithu Nalla Samayam – சமயமிது நல்ல சமயம்

சமயமிது நல்ல சமயம் – Samayamithu Nalla Samayam பலலவி சமயமிது நல்ல சமயம் , உமதாவிதரவேனுமே சாமி அனுபல்லவி அமையுஞ் சத்துவங்குன்றி,அருள் ஞானத் துயிரின்றி ,அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்அடியன்மீ தணல் மூட்டி யுயிர் தர , சரணங்கள் 1.யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும் விசுவாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டிமிஞ்சுஞ் சீவ நற்கனிகளீங்குமைக்கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சமய 2.ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோசெய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிடஉந்தையையினுற் சாகநல்லாவியை, –

Samayamithu Nalla Samayam – சமயமிது நல்ல சமயம் Read More »

Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும்

இந்த வேளையினில் – Intha Vealayinil Vantharulum சரணங்கள் 1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போஎங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. 2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன்ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே. 3. ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்தஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே. 4. ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்குஅஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே 5. சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள்ஜீவ வழி காட்டிப் பாவம்

Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும் Read More »

Unthan Aaviyae Swami – உந்தன் ஆவியே சுவாமி

உந்தன் ஆவியே சுவாமி – Unthan Aaviyae Swami பல்லவி உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்வந்து சேரவே , அருள் தந்து காவுமே . சரணங்கள் 1.முந்து மானிடர் வினை தந்த சாபமும்நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . – உந்தன் 2.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன் 3.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விடசித்தமாய் உரை புரி நித்ய தேவனே

Unthan Aaviyae Swami – உந்தன் ஆவியே சுவாமி Read More »

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae ஆரூபியே அரூப சொரூபியே – எமைஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே.திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோனசுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான – அரூ சரணங்கள் 1.ஆதி காரண அரூபியே – அசரீரி சத்யநீதி ஆரண சொரூபியேவேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ரதீதிலா துயர் விசித்ர ஜாதி யாருடபவித்ர- அரூ 2.சீரு லாவிய தெய்வீகமே –திரி முதல் ஒரு பொருள்ஏரு லாவிய

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae Read More »

Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை

தேவாசனப்பதியும் சேனை – Devasanapathium Senai 1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத்தேவர் குலமாய் வாரதாரையா? இவர்தேவ னுரைப்படிபவ வினைப்படிஏவை மனப்படிஆவல் மிகப்படிவணங்குஞ் ஜெகஜோதிப் பொருள்! தானையா- இவர் 2.முன்னணி பின்னணியினி லோசன்னா! ஓசன்னா வெனஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்உத்தம நேசனாம்சத்திய போசனாம்பத்தரின் வாசனாம்நித்திய ஈசனாம்உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா- இவர் 3.பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்பாவலருடன் வாரதாரையா? இவர்பசியற்றிருந்தவர்பொசிப்பற்றிருந்தவர்வசைபெற்றிருந்தவர்அசைவற்றிருந்தவர்பாவ விமோசன ராசன் தானையா.- இவர் 4.சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்சிங்காரமாய் வருவதாரையா? இவர்சீருற்றதிபனாம்பேர் பெருற்றிறைவனாம்பாருற்றதிபனாம்வேருற்றெழுந்தனாம்சீவ வழி சொல்வரிவர் தானையா.-

Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை Read More »

Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன்

எத்தனை நாவால் துதிப்பேன் – Eththanai Naavaal Thuthipean பல்லவி எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து. அனுபல்லவி நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். – எத்தனை சரணங்கள் 1. நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்சம்பூரண சவரட்சணை செல்வம். – எத்தனை 2. பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்பேதை பலவீனம் பாராதருள் கோனே!சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே!

Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன் Read More »

Paavikku Nesararae – பாவிக்கு நேசராரே

பாவிக்கு நேசராரே – Paavikku Nesararae பல்லவி பாவிக்கு நேசராரேயேசு மானுவேலரே – ஆ! நரர் சரணங்கள் 1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரேயேசுகிறிஸ்துநாதரே ஆசை மானுவேலரே! – ஆ! 2.பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரேகிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவேலரே – ஆ! 3.நெரிந்த நாணல் முறியார் பொரிந்த திரியவியார்நிர்ப்பந்தரைத் தள்ளாரே யேசு மானுவேலரே – ஆ! 4.கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்இட்டப்ரசாதத்தாரே யேசு மானுவேலரே – ஆ! Paavikku NesararaeYeasu Maanuvealarae Aa Narar 1.Maasattra Devanaar

Paavikku Nesararae – பாவிக்கு நேசராரே Read More »

Paarkka Munam Varuvean – பார்க்க முனம் வருவேன்

பார்க்க முனம் வருவேன் – Paarkka Munam Varuvean பல்லவி பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில்பத்ரமாகத் கரிசித்த மேசியாவை. அனுபல்லவி ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன்அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து – பார் 1.நிச்சய சாதரண சத்திய வேதனைநின்மல ஞான வரப்பிரசாதனைஉச்சித வாக்ய சுவிசேட போதனைஉன்னத ரட்சகர் கிறிஸ்தேசு நாதனை 2.முற் பிதாக்கள் விரும்பிய தேட்டம்முன்னே ஆதிப் பிதாவின் சிரேட்டம்எப்பு விக்கும் எவர்க்கும் கொண்டாட்டம்எந்தையின் சுதன்மேல் என்றன் நாட்டம் 3.ஆசைக் கிறிஸ்துண்மை யான நல் ஆயனைஆத்தும நாயகர் ஆன

Paarkka Munam Varuvean – பார்க்க முனம் வருவேன் Read More »

Iththai Meethinil Vithakana – இத்தரைமீதினில் வித்தகனா

இத்தரைமீதினில் வித்தகனா – Iththarai Meethinil Vithakana பல்லவி இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்தஉத்தமனே தோத்ரம் அனுபல்லவி நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச்சித்தங்கொள்வாயென் மீது தத்தஞ் செய்தேனிப்போது சரணங்கள் 1.கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோகாதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோவிண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோவேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ- இத் 2.அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயேஆசாரியன் தீர்க்கன் ஆயினும் ஆடும் நீயேஉன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையேஉத்தம சத்திய முத்தே அதிபதியே- இத் 3.தேனே, கனியே,

Iththai Meethinil Vithakana – இத்தரைமீதினில் வித்தகனா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version