Iththai Meethinil Vithakana – இத்தரைமீதினில் வித்தகனா

இத்தரைமீதினில் வித்தகனா – Iththarai Meethinil Vithakana

பல்லவி

இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்த
உத்தமனே தோத்ரம்

அனுபல்லவி

நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச்
சித்தங்கொள்வாயென் மீது
தத்தஞ் செய்தேனிப்போது

சரணங்கள்

1.கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோ
காதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோ
விண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோ
வேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ- இத்

2.அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயே
ஆசாரியன் தீர்க்கன் ஆயினும் ஆடும் நீயே
உன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையே
உத்தம சத்திய முத்தே அதிபதியே- இத்

3.தேனே, கனியே, என்றுந் திகட்டாத அமிர்தமே
தீயனென் மனப்புண்கள் ஆற்றிடும் அவிழ்தமே
வானே யிருந்துபுவி வந்த பெரும் பதமே
மறவாது திருப்புகழ் வரைவேன் நிதம் நிதமே- இத்

4.வானாசனத்திருந்து மனுக்குலத்தை நினைந்து
தானாமனமுவந்து தாரணியில் பிறந்து
கோனாய் விளங்காநிற்கும் குருவேசுநாதனை நான்
ஏனோ மறந்து இங்கே வீணே தவிப்பது காண்- இத்

5.செஞ்சோதிபோன்ற அவன் சீர்பாதத்தை எந்நாளும்
நெஞ்சாசனத்தில் வைத்து நீடுழிவாழ்த்தல் வேணும்
பஞ்சாய்ப் பறந்திடுமென் பஞ்சபாதம் யாவும்
அஞ்சேன் அஞ்சேனே தேவதஞ்சம் கண்டதே போதும் – இத்

Iththarai Meethinil Vithakana Eluntha
Uththamanae Thothram

Niththamen Irudhayam Suththamaaga Vilanga
Siththan Kolvaayen Meethu
Thaththanj Seitheanipothu

1.Kannae Maniyae Unnai Kandapin Viduveanae
Kaathalaai Pavaththilveen Kaalam Pinniduveano
Vinnae Unai Maranthu Vearontrai Thoduveano
Veasha Maarkkam Nadanthu Veadhanai Paduveano

2.Annaiyum Thanthaiyum Aalum Porulum Neeyae
Aasariyan Theerkkan Aayinum Aadum Neeyae
Unnai Pirinthaal Vearu Poga Vazhi Yilaiyae
Uththama Saththiya Muththae Athipathiyae

3.Theanae Kaniyae Entru Thigattatha Amirthamae
Theeyean Manapunkal Aattridum Avilthamae
Vaanae Yirunthu Puvi Vantha Pearum Pathamae
Maravaarhu Thirppugal Varaivean Nitham Nithamae

4.Vaanaasanaththirunthu Manukkulaththai Ninaithu
Thanaamanamuvanthu Thaaraniyil Piranthu
Konaai Vilankaanirkkum Kuruveasu Naathanai Naan
Yeano Maranthu Ingae Veenae Thavippathu Kaan

5.Senjsothi Pontra Avan Seer Paathathai Ennaalum
Nenjsaasanaththil Vaithu Needuli Vaalththal Veanum
Panjaai Paranthidumean Panja Paatham Yaavum
Anjean Anjeanae Deva Thanjam Kandathae Pothum

கானானியரின் எல்லை, சீதோன்முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது.

இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும், காமுடைய சந்ததியார்.

சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.

சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.

ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.

அர்பக்சாத் சாலாவைப்பெற்றான்; சாலா எபேரைப்பெற்றான்.

ஆதியாகமம் | Genesis: 10:19,20,21,22,23,24

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version