
கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae
கிருபை நிறைந்தவரே
என்னை ஆளும் பரிசுத்தரே
இரக்கம் நிறைந்தவரே
என்னை மாற்றின பரிசுத்தரே
நன்றி இயேசு நாதா – உமக்கு
நன்றி இயேசு நாதா
கனி கொடுக்கா மரமாக
இருந்தேன் நான்
அடியில் கோடாரியும் இருந்ததை
மறந்தேன் நான் -2
நீர் என்னை வெட்டிருக்கலாம்
இல்லை அழித்திருக்கலாம் – உங்க
கிருபையினாலே மனம்
திரும்ப வைத்தீரே -2
கல்லு முள்ளு நடைபாதையில்
விழுந்த விதை நான்
நல்ல கனி கொடுக்கும்
மரமாக வளர வைத்தீரே -2
நீர் என்னை வெட்டிருக்கலாம்
இல்லை அழித்திருக்கலாம் – உங்க
கிருபையினாலே மனம்
திரும்ப வைத்தீரே -2