உம்மை நோக்கி பார்த்த முகங்கள் – Ummai nokki paartha mugangal song lyrics

உம்மை நோக்கி பார்த்த முகங்கள் – Ummai nokki paartha mugangal song lyrics

உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
எல்லாம் பிரகாசமாகுதே!
உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
எல்லாம் வெளிச்சமாகுதே!

நீர் ஆதியும் அந்தமுமானவரே,
ஆல்பா ஒமேகாவுமானவரே,
தொடக்கமும் முடிவுமில்லாதவர்
நீர் அழகானவர் !

உம்மை பாடுவேன்,
உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த நான்
வெட்கப்படுவதில்லையே ! (2)

1.எத்தனை மனிதர்கள் முகத்திற்கு
நேரே பேசினாரே!
எத்தனை மனிதர்கள் முகத்திற்கு
நேரே ‌‌சிரித்தனரே ,
ஒன்றும் சொல்லாமல்
உம்மை நோக்கிப்பார்த்தேனே
எந்தன் முகத்தில் உந்தன் பிரசன்னத்தை
பார்த்து பின்னாக சென்றனரே !

உம்மை பாடுவேன்,
உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த நான்
வெட்கப்படுவதில்லையே ! (2)

2.எத்தனை மனிதர்கள் என்னை
கீழே தள்ளினாரே!
எத்தனை மனிதர்கள் முகத்திற்கு
‌‌நேரே ‌‌சபித்தனரே!
‌‌ ஒன்றும் நான் செய்யாமல் உம்மை
‌ ‌ நோக்கிப்பார்த்தேனே
உந்தன் முகத்தின் வெளிச்சத்தால்
மனிதர்கள் முன்பாக உயர்த்தினிரே!

உம்மை பாடுவேன்,
உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த நான்
வெட்கப்படுவதில்லையே ! (2)

மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும் -2
உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது -2

ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)
இயேசுவே

1.மலைகளை போல மனிதனை நம்பினேன்
விலகும் போதோ உள்ளே உடைந்தேன்
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர்

ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)
இயேசுவே

2.கால்கள் சறுக்கி விழுந்தபோதிலும்
கரத்தை பிடித்து கன்மலைமேல் நிறுத்தினீர்
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர்

We will be happy to hear your thoughts

      Leave a reply