உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
நான் தலை நிமிர்ந்து நடந்தேன்
என் கரத்தை பிடித்து கொண்டீர்
வழுவாமல் நடக்கச் செய்தீர் (2)
நான் வனாந்தரத்தில் நடந்தாலும்
அதை வயல்வெளியாக மாற்றுவீர்
நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர் (2)
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)
எனக்காக நீர் நொருக்கப்பட்டீர்
எனக்காக நீர் காயப்பட்டீர் (2)
எனக்காக நீர் அடிக்கப்பட்டீர்
நான் சுகமானேன் சுகமானேன் – ஓ (2)
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)
சிலுவையில் எந்தன் குறைவுகளை சுமந்தீர் எனக்காய் முழுவதுமாய் (2)
ஐஸ்வரியவானாய் மாற்றி விட்டீர்
நான் பெலனானேன் பெலனடைந்தேன் (2)
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)
பாவங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டீர் என் சாபங்கள் எல்லாம் முறியடித்தீர் (2) கறைகளையெல்லம் கரைய செய்தீர் நீதிமானாக மாற்றி விட்டீர் (2)
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)
We will be happy to hear your thoughts