Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Jeevathipathiyae Jothiyae – ஜீவாதிபதி ஜோதியே

ஜீவாதிபதி, ஜோதியே, பக்தரின் இன்ப இயேசுவே லோகின் மா இன்பம் ருசித்தும் சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும் பாதம் சேர்ந்தோரை மீட்பரே இவ்வுண்மை என்றும் மாறாதே தேடுவோர்க்கு நீர் நல்லவர் பற்றுவோர்க்கு சம்பூரணர் விண் அப்பம் உம்மில் ருசிப்போம் முற்றும் உட்கொள்ள ஆசிப்போம் நீர் ஜீவ ஊற்று உம்மிலே உள்ளத்தின் தாகம் தீருமே மாறிடும் வாழ்க்கை யாவிலும் எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும் உம் அருட் பார்வை இன்பமே விசுவாசிப்போருக்கு பாக்கியமே தங்கும் எம்மோடு, இயேசுவே எக்காலும் […]

Jeevathipathiyae Jothiyae – ஜீவாதிபதி ஜோதியே Read More »

En Meippar Yesu – என் மேய்ப்பர் இயேசு

1. என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான், நான் தாழ்ச்சியடையேனே; ஆட்கொண்டோர் சொந்தமான நான் குறையடைகிலேனே. 2. ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால் என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்; மெய் மன்னாவாம் தம் வார்த்தையால் நல் மேய்ச்சல் எனக்கீவார். 3. நான் பாதை விட்டு ஓடுங்கால் அன்பாகத் தேடிப் பார்ப்பார்; தோள்மீதில் ஏற்றிக் காப்பதால் மகா சந்தோஷங்கொள்வார். 4. சா நிழல் பள்ளத்தாக்கிலே நான் போக நேரிட்டாலும், உன் அன்பின் கோலைப் பற்றவே, அதே என் வழி காட்டும். 5.

En Meippar Yesu – என் மேய்ப்பர் இயேசு Read More »

Unnathamaana Maa Raajavaana – உன்னதமான மா இராஜாவான

1. உன்னதமான மா இராஜாவான சீர் சிறந்த இயேசுவே; உம்மில் களித்து உம்மைத் துதித்து நேசித்துக்கொண்டிருப்பேனே. 2. பூ மலர் காடும் பயிர் ஓங்கும் நாடும் அந்தமும் சிறப்புமாம்; இயேசுவின் அந்தம் எனக்கானந்தம் என் மனதின் குளிர்ச்சியாம் 3. அண்டங்கள் யாவும் சூரியன் நிலாவும் அந்தமாய் பிரகாசிக்கும்; அவர் முன்பாக மா ஜோதியாக மினுங்கும் யாவும் மங்கிப்போம். 4. விண் மண்ணுடைய மகிமை மறைய அவர் அந்தமானவர்; வானத்திலேயும் பூமியிலேயும் நான் நாடினோர் என் ரட்சகர்.

Unnathamaana Maa Raajavaana – உன்னதமான மா இராஜாவான Read More »

Yesuvae Neerthaamae – இயேசுவே நீர்தாமே

1.இயேசுவே, நீர்தாமே என் மகிழ்ச்சியாமே நீர் என் பூரிப்பு; என் மனம் நாள்தோறும் ஆசை வாஞ்சையோடும் ஏங்குகின்றது. கர்த்தரே, உலகிலே உம்மை யன்றி வாழ்விராது, இன்பமுங் காணாது. 2.நல் மறைவின் கீழே நான் ஒதுங்க, நீரே என் அரண்மனை; சாத்தான் வர்மிக்கட்டும், எதிரி சீறட்டும், இயேசு என் துணை. திகிலும் பயங்களும் பாவ நரகக்கெடியும் இயேசுவால் தணியும். 3.வலு சர்ப்பத்துக்கும் சாவின் பற்களுக்கும் நான் திடுக்கிடேன். லோகமே, விரோதி; நான் சங்கீதம் ஓதி தோத்திரிக்கிறேன். தெய்வக்கை என்

Yesuvae Neerthaamae – இயேசுவே நீர்தாமே Read More »

Yesuvae Ummai Thiyaanathil – இயேசுவே உம்மை

1. இயேசுவே உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே. 2. மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவே இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே? 3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர் நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு சந்தோஷம் ஈகுவீர். 4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் ஈவீர் எந்நன்மையும் கண்டடைந்தோரின் பாக்கியசீர் யார் சொல்ல முடியும்? 5. இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார் அவ்வன்பின் ஆழம் அளந்து

Yesuvae Ummai Thiyaanathil – இயேசுவே உம்மை Read More »

Yesu Kiristhuvae Ulagathilae – இயேசு கிறிஸ்துவே உலகத்திலே

1. இயேசு கிறிஸ்துவே உலகத்திலே கெட்டுப்போனவருக்கான ஒளியும் உயிருமான ரட்சகர் நீரே இயேசு கிறிஸ்துவே. 2. என்னை மீட்க நீர் ஜீவனை விட்டீர் குற்றத்தை எல்லாம் குலைக்க, என்னைத் தீமைக்கு மறைக்க எனக்காக நீர் ஜீவனை விட்டீர். 3. எங்கள் மீட்புக்கு லோகத் தோற்றத்து நாளின் முன்னே வார்த்தை தந்தீர்; காலமாகையில் பிறந்தீர் பாவிகளுக்கு மீட்புண்டாயிற்று. 4. வெற்றி வேந்தரே, பாவம் சாபம் பேய் நரகத்தையும் ஜெயித்தீர்; நாங்கள் வாழ நீர் மரித்தீர்; உம்மால் துஷ்டப் பேய்

Yesu Kiristhuvae Ulagathilae – இயேசு கிறிஸ்துவே உலகத்திலே Read More »

Vinnorkal pottrum – விண்ணோர்கள் போற்றும்

1. விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா உம் மேன்மை அற்புதம்; பளிங்கு போலத் தோன்றுமே உம் கிருபாசனம்! 2. நித்தியானந்த தயாபரா அல்பா ஒமேகாவே மா தூயர் போற்றும் ஆண்டவா, ராஜாதி ராஜாவே! 3. உம் ஞானம் தூய்மை வல்லமை அளவிறந்ததே! நீர் தூயர் தூயர் உந்தனை துதித்தல் இன்பமே! 4. அன்பின் சொரூபி தேவரீர், நான் பாவியாயினும், என் நீச நெஞ்சைக் கேட்கிறீர் உம் சொந்தமாகவும். 5. உம்மைப் போல் தயை மிகுந்த ஓர் தந்தையும் உண்டோ?

Vinnorkal pottrum – விண்ணோர்கள் போற்றும் Read More »

Naan Devareerai Kartharae – நான் தேவரீரை கர்த்தரே

1.நான் தேவரீரை, கர்த்தரே, துதிப்பேன்; அடியேன் எல்லாரின் முன்னும் உம்மையே அறிக்கை பண்ணுவேன். 2.ஆ, எந்தப் பாக்கியங்களும் உம்மால்தான் வருமே; உண்டான எந்த நன்மைக்கும் ஊற்றானவர் நீரே. 3.உண்டான நம்மை யாவையும் நீர் தந்தீர், கர்த்தரே; உம்மாலொழிய எதுவும் உண்டாகக் கூடாதே. 4.நீர் வானத்தை உண்டாக்கின கர்த்தா, புவிக்கு நீர் கனிகளைக் கொடுக்கிற பலத்தையும் தந்தீர். 5.குளிர்ச்சிக்கு மறைவையும் ஈவீர்; எங்களுக்குப் புசிக்கிறதற் கப்பமும் உம்மால் உண்டாவது. 6.யாரால் பலமும் புஷ்டியும் யாராலேதான் இப்போ நற்காலஞ் சமாதானமும்

Naan Devareerai Kartharae – நான் தேவரீரை கர்த்தரே Read More »

Kalipudan kooduvoom – களிப்புடன் கூடுவோம்

1. களிப்புடன் கூடுவோம் கர்த்தரை நாம் போற்றுவோம் அவர் தயை என்றைக்கும் தாசரோடு நிலைக்கும். 2. ஆதிமுதல் அவரே நன்மை யாவும் செய்தாரே அவர் தயை என்றைக்கும் மாந்தர்மேலே சொரியும். 3. இஸ்ரவேலைப் போஷித்தார் நித்தம் வழி காட்டினார்; அவர் தயை என்றைக்கும் மன்னாபோலே சொரியும். 4. வானம் பூமி புதிதாய் சிஷ்டிப்பாரோ ஞானமாய் அவர் தயை என்றைக்கும் அதால் காணும் யாருக்கும்.

Kalipudan kooduvoom – களிப்புடன் கூடுவோம் Read More »

Karthavae yugayugamaai – கர்த்தாவே யுகயுகமாய்

1.கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர், நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர். 2. உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம் உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம். 3. பூலோகம் உருவாகியே மலைகள் தோன்றுமுன் சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன். 4. ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போலாமே, யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே. 5. சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார் உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார். 6.

Karthavae yugayugamaai – கர்த்தாவே யுகயுகமாய் Read More »

Entrendum Jeevipor – என்றென்றும் ஜீவிப்போர்

1. என்றென்றும் ஜீவிப்போர் அதரிசனர், எட்டா ஒளியில் உள்ளோர் சர்வ ஞானர், மா மேன்மை மகத்துவர் அநாதியோராம்; சர்வவல்லோர் வென்றோர் நாமம் போற்றுவோம். 2. ஓய்வோ துரிதமோ இன்றி ஒளி போல், ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால், வான் எட்டும் மலைபோல் உம் நீதி நிற்கும் அன்பு நன்மை பெய்யும் உந்தன் மேகமும். 3. பேருயிர் சிற்றுயிர் ஜீவன் தேவரீர், யாவர்க்குள்ளும் உய்வீர் மெய்யாம் ஜீவன் நீர், மலர் இலைபோல் மலர்வோம், செழிப்போம், உதிர்வோம், சாவோம், நீரோ மாறாதோராம்.

Entrendum Jeevipor – என்றென்றும் ஜீவிப்போர் Read More »

Unnathamaana stalathil – உன்னதமான ஸ்தலத்தில்

1. உன்னதமான ஸ்தலத்தில் மா ஆழமுள்ள இடத்தில், கர்த்தாவே, நீர் இருக்கிறீர், எல்லாவற்றையும் பார்க்கிறீர். 2. என் அந்தரங்க எண்ணமும் உமக்கு நன்றாய்த் தெரியும்; என் சுகதுக்கம் முன்னமே நீர் அறிவீர் என் கர்த்தரே. 3. வானத்துக்கேறிப் போயினும் பாதாளத்தில் இறங்கினும், அங்கெல்லாம் நீர் இருக்கிறீர், தப்பாமல் கண்டுபிடிப்பீர். 4. காரிருளில் ஒளிக்கினும், கடலைத் தாண்டிப் போயினும் எங்கே போனாலும் தேவரீர் அங்கென்னைச் சூழ்ந்திருக்கிறீர். 5. ஆராய்ந்து என்னைச் சோதியும், சீர்கேட்டை நீக்கி ரட்சியும், நல்வழி தவறாமலே

Unnathamaana stalathil – உன்னதமான ஸ்தலத்தில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version