1. என்றென்றும் ஜீவிப்போர் அதரிசனர்,
எட்டா ஒளியில் உள்ளோர் சர்வ ஞானர்,
மா மேன்மை மகத்துவர் அநாதியோராம்;
சர்வவல்லோர் வென்றோர் நாமம் போற்றுவோம்.
2. ஓய்வோ துரிதமோ இன்றி ஒளி போல்,
ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்,
வான் எட்டும் மலைபோல் உம் நீதி நிற்கும்
அன்பு நன்மை பெய்யும் உந்தன் மேகமும்.
3. பேருயிர் சிற்றுயிர் ஜீவன் தேவரீர்,
யாவர்க்குள்ளும் உய்வீர் மெய்யாம் ஜீவன் நீர்,
மலர் இலைபோல் மலர்வோம், செழிப்போம்,
உதிர்வோம், சாவோம், நீரோ மாறாதோராம்.
4. மா மாட்சி பிதா, தூய ஜோதி தந்தாய்!
தாழுவர் உம் தூதர் மா வணக்கமாய்
துதிப்போம், மகத்தாய்க் காணத் தோற்றுவீர்,
கண் கூசும் ஜோதியாம் ஜோதி தேவரீர்.