csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Yesuvin othukkil Naan – யேசுவின் ஒதுக்கில் நான்

பல்லவி யேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும். அனுபல்லவி நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்கிறேன். – யேசு சரணங்கள் 1. நாள் ஓடும், சாவி சேரும், நாதா, எந்த நேரமோ?பாழுடல் விட்டு ஜீவன் பறக்கும் வேளையறியேன். – யேசு 2. யேசுவை விட்டென் சாவு என்னைப் பிரித்திடாது;நீசன் அவரில் நின்றென் நேசரேயென்று சொல்வேன். – யேசு 3. என் ஜீவன் இன்றுபோயும் என் மீட்பரால் நான் பாக்யன்;என் சாவு நாளை வந்தும் யேசுவுக்குள் நான் நிற்பேன். […]

Yesuvin othukkil Naan – யேசுவின் ஒதுக்கில் நான் Read More »

Vegu Pearkaluku Inbamaana – வெகு பேர்களுக் கின்பமான

1. வெகு பேர்களுக் கின்பமான மேதினியே நீ என்றனுக்கு மிகவும் திகில் கசப்பாம்பர தேசம் இது மெய்யலோ? ஜெகந்தன்னைமா ஆசையாய்ப் பற்றும் ஜெகத்தோரத்தால் வாழட்டும், தேவரீருட பேரிலே மெத்தத் தேட்டமாகினேன் யேசுவே. 2. யேசு நீர் தரிசினை தந்தெனை யேற்கும் நன்மைக்காய் யாவையும் எளியேன்வெறுத் திந்தலோகத்தின் இன்பவாழ்வினைக் குப்பையாய் மோசமென்றுநா னெண்ணுவேன், நீரென் மோட்சமும் கதி ஆஸ்தியும், முன்னவா, அடியே னும்மோடென்றும் முற்றுங்கூடினால் பாக்கியன். 3. இந்த ஏழைச் சரீரமாமண்ணை இளைப்பாறிட மண்ணினில் ஏற்கவேகொண்டு போய்ப்புதைத்திடும் காலம்

Vegu Pearkaluku Inbamaana – வெகு பேர்களுக் கின்பமான Read More »

மரித்தோர் எவரும் – Marithor Evarum

மரித்தோர் எவரும் – Marithor Evarum பல்லவி மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,வானெக்காளத் தொனி முழங்க. அனுபல்லவிஎரி புகை மேக ரத மேறிஏசு மகா ராஜன் வருங்கால். – மரித்தோர் சரணங்கள் 1. தூதர் மின் னாற்றிசை துலங்க,ஜோதி வான் பறை இடி முழங்க,பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,பரிசுத் தோர் திரள் மனதிலங்க. – மரித்தோர் 2. வானம் புவியும் வையகமும்மட மட வென்று நிலை பெயர,ஆன பொருளெல்லாம் அகன் றோட,அவரவர் தம் தம் வரிசையிலே. – மரித்தோர் 3.

மரித்தோர் எவரும் – Marithor Evarum Read More »

Kaanikai Tharuvayae – காணிக்கை தருவாயே

பல்லவி காணிக்கை தருவாயே-கர்த்தருக்குனது காணிக்கை தருவாயே அனுபல்லவி காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால். – காணிக்கை சரணங்கள் 1. பத்தில் ஒரு பங்குதானோ?-பத்தினில் கட்டுப் பட்ட யூதருக் கல்லவோ? அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால், பத்தில் ஒரு பங்கல்ல, பல மடங்காகிடாதோ? – காணிக்கை 2. உன்றன் உடல் உன் சொந்தமோ?-அதைவிடினும் உன் மனம் ஆவி பந்தமோ? அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால் உன்னையும் உன்னுடைய

Kaanikai Tharuvayae – காணிக்கை தருவாயே Read More »

Kartharuku Kaanikai itho – கர்த்தருக்குக் காணிக்கையிதோ

பல்லவி கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த கர்த்தருக்குக் காணிக்கை! இதோ! அனுபல்லவி கர்த்தருக்குக் காணிக்கையாய்ப் பத்திலொன்று நான் கொடுப்பேன், சத்தியக் கிறிஸ்து நாதர் சபையை வர்த்திக்கவேணும். – கர்த்தருக்கு சரணங்கள் 1. அநியாயம் நீங்க வேணும்,-உலகிலே மெய் அறிவு வளர வேணும், தனியேக மெய்த்தேவனை-நற்தேசத்தில் சகலரும் போற்ற வேணும், கனிவாய்ப் போதகர் வேதம் கற்றறிந்து சொல்லவேணும், கணக்காய் இதன் செலவு கட்டி வரவேணும், அய்யா! – கர்த்தருக்கு 2. ஆபிரகாம் பத்திலொன்றையே-மெல்கிசே தேக்குக்-கு அனைத்திலும் தந்ததையே! மா

Kartharuku Kaanikai itho – கர்த்தருக்குக் காணிக்கையிதோ Read More »

Neethiyamo Neer Sollum – நீதியாமோ நீர் சொல்லும்

நீதியாமோ நீர் சொல்லும் ஓய் நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில் சரணங்கள் ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை ஆதரித்திடுவதே யோக்கியம் ஓகோ பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச பாதை நடக்கில் சிலாக்யம் – நீதி தரித்திரக் கிரங்குவோன் உடனே இடுவான் தற்பரனுக் கவன் கடனே என்று கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார் கடுநெஞ் சகல் மானிடனே – நீதி அன்புடன் விதவையும் போட்ட காசை அதி வியப்பாய் யேசு காட்டப் புகழ் இன்புடன் அவள் மிசை சூட்ட அதை

Neethiyamo Neer Sollum – நீதியாமோ நீர் சொல்லும் Read More »

Aandavar Pankaha dasama paakam – ஆண்டவர் பங்காக தசம பாகம்

ஆண்டவர் பங்காக தசம பாகம் அன்பர்களே ,தாரும்; -அதால் வரும் இன்பந்தனைப் பாரும் . அனுபல்லவி வான்பல கனிகளைத் திறந்தாசீர் வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும் நான் தருவேன் ,பரிசோதியுங்களென்று ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்- ஆண் சரணங்கள் வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும் விண்ணவர் கோமானே -அந்த மேதகத்தை நன்றி ஞாபகம் செய்திட விதித்தது தானே . வேதனம் ,வியாபாரம் ,காலி , பறவையில் , வேளாண்மை , கைத்தொழில் ,வேறுவழிகளில் , ஊதியமாகும் எதிலும் அவர் பாகம் உத்தமமாக

Aandavar Pankaha dasama paakam – ஆண்டவர் பங்காக தசம பாகம் Read More »

Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை

உன்றன் திருப்பணியை – Untran Thirupaniyai பல்லவி உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரியஉதவாத பாவி நானே. அனுபல்லவி அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டுவந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு – உன்றன் சரணங்கள் 1. வேதனத்தின் பொருட்டோ, மேலவர் நிமித்தமேவெளியிட் டறிக்கை செய்யவோ?-உலகாதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்அடைந்து ப்ரகாசிக்கவோ?ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண் டுழைக்கேனோ? – உன்றன் 2. வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டுவெளியேறா தகம் துஞ்சினேன்,-வேளைப்பான முணவுபிந்த பலபிணி வருமென்றபயத்தாலே

Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை Read More »

Jeeva Vasanam Kooruvom – ஜீவ வசனங் கூறுவோம்

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom பல்லவி ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். அனுபல்லவி பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்தஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ சரணங்கள் 1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்பட்டு மடியும் வேளையில்;பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்துவேதனை தானடையப் போவோர் கதி பெறவே. – ஜீவ 2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசுகர்த்தன் சேவையில் அமர்ந்தே;நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்தநல்ல ஈவு வரங்கள் எல்லாருங்

Jeeva Vasanam Kooruvom – ஜீவ வசனங் கூறுவோம் Read More »

Aaththuma Aathaayam Seiguvomae – ஆத்தும ஆதாயம் செய்குவோமே

ஆத்தும ஆதாயம் செய்குவோமே – Aaththuma Aathaayam Seiguvomae பல்லவி ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இதுஆண்டவர்க்குப் பிரியம் – நாமதினால் ஆசீர்வாதம் பெறுவோம் அனுபல்லவி சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்அற்புதமான பலனை அடையலாம் சரணங்கள் 1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்பாதித்துக் கொண்டாலும் – ஒருநாளுமழியாத ஆத்துமத்தை அவன்நஷ்டப்படுத்தி விட்டால்,ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்தஎம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே – ஆத்தும 2.

Aaththuma Aathaayam Seiguvomae – ஆத்தும ஆதாயம் செய்குவோமே Read More »

Aruppo Miguthi – அறுப்போ மிகுதி

பல்லவி அறுப்போ மிகுதி, ஆட்கள் தேவை, அருளும் நாதனே திவ்ய அருமைப்போதகனே. சரணங்கள் 1. இந்திய தேசம் எங்கும் இருள் எட்டி ஓடவே, எங்கள் சபைகள் நீடவே. – அறு 2. எமைப்புரந்த யேசுநாமம் எவருங்காணவே, இருள் அடங்கி நாணவே. – அறு 3. வசன அமுதை வார்க்கும் நல்ல வலவர் ஓங்கவே, மதிகேடு நீங்கவே. – அறு 4. நாடு நகரம் காடுமேடு நாடுமிடமெலாம் சபைபரவு மிடமெல்லாம். – அறு 5. போதகன்மார் ஆவியோடுன் புகழைஓதவே,

Aruppo Miguthi – அறுப்போ மிகுதி Read More »

Purappadungal Deva – புறப்படுங்கள் தேவ

புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே சரணங்கள் கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து – புற மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் – புற அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும் பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் – புற சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர் வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து – புற

Purappadungal Deva – புறப்படுங்கள் தேவ Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version