Jeeva Vasanam Kooruvom – ஜீவ வசனங் கூறுவோம்

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom

பல்லவி

ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.

அனுபல்லவி

பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ

சரணங்கள்

1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்
பட்டு மடியும் வேளையில்;
பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே. – ஜீவ

2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே;
நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய. – ஜீவ

3. பூலோகம் எங்கும் நமையே,-கிறிஸ்து நமை
போகச் சொல்லி விதித்தாரே;
காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந் திரிந்து. – ஜீவ

4. விண்ணின் மகிமை துறந்தார்,-கிறிஸ்து நமை
மீட்கக் குருசில் இறந்தார்;
மண்ணின் புகழ், பெருமை எல்லாம் தூசுகுப்பை என்
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு. – ஜீவ

Jeeva Vasanam Kooruvom – Sakothararae
Searnthae Ekkaalam Oothuvom

Paavikal Mealurugi Paadu Pattu Mariththa
Jeevaathi Pathi Yeasu Sinthai Magilnthidavae

1.Paathaga Peayin Valaiyil Aiyo Thiral Pear
Pattu Madiyum Vealaiyil
Peathamai Yodu Pidivaatha Marul Migunthu
Vedhanai Thaanadaiya Povoor Kathi Pearavae

2.Kaaduthanilae Alainthae Kiristheasu
Karththan Seavaiyil Amarnthae
Naadu Nagar Kiraamam Theadi Naam Pettradaintha
Nalla Eevu Varangal Ellarum Kandadaiya

3.Boologam Engam Namaiyae Kirsithu Namai
Poga Solli Vithithaarae
Kaalamellaam Ummodu Kooda Iruppean Entra
Karththan Vaakkai Ninaiththu Eththeasam Thirinthu

4.Vinnin Magimai Thuranthaar Kiristhu Namai
Meetkka Kurusil Iranthaar
Mannin Pugal Pearumai Ellaam Thoosu Kuppai
Entreanni Siluvai Thanai Eduththu Magilchiyodu

 

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version