Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல்

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல்

பூவோடு பேசும் தென்றல் கரையோடு மோதும் அலைகள்
காதோரம் சொல்வதென்னவோ என் தேவனை
நாள்தோறும் துதிப்பதல்லவோ என் தேவனை
நாள்தோறும் துதிப்பதல்லவோ

வார்த்தையினாலே உலகத்தப் படைத்தார்
வலது கை நீட்டினார் வானங்கள் அளப்பார்
மூச்சுக் காற்றாலே சமுத்திரம் பிளப்பார்
மலைகளைக் கூட தூக்கியே நிறுப்பார்
யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு

பூமியின் தூளை மரக்காலால் அடக்கி
தண்ணீர்களைத் தன் கரங்களில் பிடிப்பார்
வானங்களை ஒரு சால்வை போல் சுருட்டி
விண்மீன்களை அவர் பெயர் சொல்லி அழைப்பார்
யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு

பர்வதங்கள் அவர் பிரசன்னத்தில் உருகும்
சகல சிருஷ்டியும் அவர் கரம் நோக்கும்
இத்தனை பெரிய தேவனின் கண்கள்
என்னையே பார்க்கும் அதிசயம் பாரு
பாரு சிலுவையில் பாரு இயேசுவைப் பாடு

We will be happy to hear your thoughts

      Leave a reply