Maname Kalangaathe – மனமே மனமே கலங்காதே

Maname Kalangaathe – மனமே மனமே கலங்காதே

மனமே மனமே கலங்காதே மாயை உலகில் மயங்காதே (2)

நிஜங்கள் இல்லாத உலகில் நீ இன்று தேடும் வாழ்க்கை அழகா
உலகை நீ நம்பி உறவை நீ தேடி போவதென்ன புதிதா
அவர் அன்பு புரியாமல் வார்த்தை அறியாமல் வாழ்வதென்ன நியாயமா
உயிரை தந்த அவர் சினேகம் புரியாமல் போவதென்ன தூரமா

மனமே மனமே கலங்காதே மாயை உலகில் மயங்காதே (2)

பாசம் வைக்க யாருமில்ல தவிக்கிறேன் தனிமையில
நேசம் கொண்டு என்னை தேடி வந்தாயே பூமியில (2)

உம்மை போல உறவை நானும் பார்த்ததில்லை
என் கைய புடிச்சு நீங்க தினம் நடத்துறீங்க (2)

நான் சொர்ந்து போன நேரம் துணையாக நீயும் என் துக்கத்துல உங்க பக்கத்துல நீங்க அணைக்கிரீங்க
என் துக்கத்துல உங்க பக்கத்துல நீங்க அணைக்கிரீங்க
மனமே…………

விரோதங்கள் தேடி பகைமையை நாடி வாழ்ந்த வாழ்வினை உடைத்திடு

பாவம் எனும் அழுக்கை சாயம் பூசாமல் அவரின் இரத்தத்தில் கழுவிடு

பிரிவுகள் நூறு உள்ளம் நிலை மாறு வழமையை நீயும் கலைந்திடு

வார்த்தையை பற்றி கிடைக்குமே வெற்றி நிலை அது என்று உணர்ந்திடு

தீய வழிகளில் தொடரும் உன் மனம் விடுதலை அடைய மறுக்குது

மீட்கும் அவர் வழியை காண முடியாமல் கண்கள் குருடாக கிடக்கிது

இன்றே அவரின் பாதத்தின் அருகே வந்து நீயும் அமந்திடு அவரை அன்றி ஒரு வழியும் இல்லை என்று உணர்ந்திடு

இன்றே அவரின் பாதத்தின் அருகே வந்து நீயும் அமந்திடு அவரை அன்றி ஒரு வழியும் இல்லை என்று உணர்ந்திடு

We will be happy to hear your thoughts

      Leave a reply