கிருபை தேவ கிருபை – Kirubai Deva Kirubai


கிருபை தேவ கிருபை – Kirubai Deva Kirubai

கிருபை தேவ கிருபை
அது என்றும் உள்ளது

இயேசுவின் தூய கிருபை
அது நம் மேல் உள்ளது [2]

நித்தியமானது சத்தியமானது – கிருபை

தூய்மையில் தவறிய வேளை
தூயவர் தூக்கியே எடுத்தார்
தாய்மையின் கரம் கொண்டு
தாங்கியே அணைத்திட்டார் [2]

உரிமையாய் நம்மையும்
பரிவுடன் நடத்திட்டார் [2] – கிருபை

ஒளியென உலகில் வந்தார்
ஒளியென விளங்கிட அழைத்தார்
ஒளிதரும் தீபங்களாய்
ஒளிர்ந்திட ஜீவிதார் [2]

நீதியின் சூரியனாய்
கரிசனை ஏந்திட்டார் [2]- கிருபை

We will be happy to hear your thoughts

      Leave a reply