இயேசுவின் நாமத்தை – Yesuvin Naamathai Potriduvom lyrics

இயேசுவின் நாமத்தை – Yesuvin Naamathai Potriduvom lyrics

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
என்றும் அவர் தூதி சான்றிடுவோம்

1. கரடுமுரடான பாதையில்
கால் தடுமாறி ஏங்குகையில்
கருணையாய் பேசி கரமதை நீட்டி
காத்திடும் கரமதை பாடிடுவோம்

2.பாவத்தின் பாரத்தை நீக்கினாரே
சாபத்தின் அகோரத்தை போக்கினாரே
சாகாததான சாவதை வென்று
தேவக்குமாரனை பாடிடுவோம்

3. யோர்தானை கடந்திடும் நேரமதில்
அனைத்திடுவார் அவர் மார்பதினில்
அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்
அன்பரின் நாமத்தை பாடிடுவோம்

Yesuvin Naamathai Potriduvom lyrics in english

Yesuvin namaththai poatriduvoam
Endrum avar thoothi satriduvoam

1.Karadumuradana pathaiyil
Kaal thadumari aengkukaiyil
Karunaiyai paesi karamathai neetti
Kaththidum karamathai patiduvoam

2.Pavaththin paraththai nekkinaarae
Sapaththin akoaraththai poakkinaarae
Sagathathana savathai vendru
Devakkumaranai patiduvoam

3.Yoarthanai kadanthidum naeramathil
Anaiththiduvar avar marpathinil
Akkarai saerththu akamakizhvikkum
Anbarin namaththai patiduvoam

✝️✝️ ஒரு நிமிடம் தியானம் ✝️✝️
நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார், அவருடைய அறிவு அளவில்லாதது.
சங்கீதம் 147:5
பல பேர் பேசும் பேச்சுகளிலே ‘நான்!, நான்!!, நான்!!!,’ ‘தான்’; மறந்தும் ‘நம்’, ‘நாங்கள்’, ‘எங்கள்’ என்று அவர்களின் வாய்களில் வரவே வராது,
கேட்பவர்கள் மனதிற்குள் அருவருப்பு அடைவார்களே என்ற எண்ணம்கூட இல்லாமல் இப்படி தங்கள் ‘தற்பெருமையை கூறிக் கொண்டே இருப்பார்கள்,
உங்களைப்பற்றி எப்போதும் பிறரிடம் பெருமையாக பேசுவதை தவிர்த்துவிடுங்கள், நான் தான் பெரியவர் என்று எப்போதும் நினைக்காதீர்கள். எனக்கு இவ்வளவு அதிகாரம் இருக்குனு எப்போதும் நினைக்காதீர்கள்,
அவசியமற்ற சூழலில் உங்களைப்பற்றி அடிக்கடி பெருமையாக மற்றவர்களிடம் பேசும்போது அது மற்றவர்களுக்குப் பயன்படாத தகவலாக மாறுகிறது, தற்பெருமையாகவும் வடிவெடுக்கிறது,
நீங்கள் ஒரு காரியம் செய்கிறீர்கள் என்றால் இது ஆண்டவருடைய கிருபையால் ஆனது என்று கூறுங்கள், ஆண்டவர் அளித்த அறிவினாலே நாம் செய்கிறோம், அவர் சித்தம் இல்லை என்றால் நம்மால் எதுவும் செய்ய முடியாது, கர்த்தராகிய ஆண்டவரே பெரியவரும் பெலமுள்ளவருமாயிருக்கிறார், அல்லேலூயா, ஆமென்.
கர்த்தருடைய ஊழியத்தில் W. மேஷாக்.

https://www.instagram.com/p/CG4DpgCn20_/

We will be happy to hear your thoughts

      Leave a reply