Yesuvae Um Naamathinaal song lyrics – இயேசுவே உம் நாமத்தினால்
1. இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே
எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்
2. நிலையில்லா இவ்வுலகில்
நெறி தவறி நாம் அலைந்தோம்
நின்னொளி பிரகாசித்திட
நீங்கா ஜீவன் பெற்றிடவே
3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால்
4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ ஓ! பாவியே
இன்றும் இயேசுவண்டை வாராயோ
நித்திய ஜீவன் பெற்றிடவே
5. இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பெலத்தால்
Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால்
- Ulagin Meetparae – உலகின் மீட்பரே
- ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan Eesaakkin Devan
- அப்பா அப்பா இயேசு அப்பா – Appa Appa Yesu Appa
- இணை இல்லாத தேவனாம் – Inai Illaa Dhevan
- எத்தனையோ நன்மைகள் – Yethanayo Nanmaihal