UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே

Deal Score+1
Deal Score+1

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே

உம் இரக்கத்தை ஆடிப்பாடுவேன்
உம் கிருபையை கொண்டாடுவேன்
உம்மைப்போல தெய்வம் வேறு இல்லை
உம் மகிமையை நான் பாடுவேன்
இவ்வுலகமெங்கும் பறை சாற்றுவேன்
எங்கள் நேசர் மீட்பர் நீர் தானே

உந்தன் அன்பை கண்டதாலே
எந்தன் உள்ளம் உம் அன்பை பாடாதிருக்குமோ

எங்கள் கால்கள் நடனம் ஆடி துதிக்கும்
உன்னதரே உந்தன் கிருபையை பாடுவோம்
உம் தயவை பாடுவோம்
எங்கள் நாவுகள் உம்மை போற்றி துதிக்கும்
உன்னதரே உந்தன் அன்பை பாடுவோம்
உம் தயவை பாடுவோம்

என் கால்கள் நடனம் ஆடுதே
என் கரங்கள் உம்மை உயர்த்துதே
உந்தன் அன்பால் என் வாழ்க்கை மாறியதே
உம் கிருபையை நான் பாடுவேன்
உந்தன் இரக்கத்தை நான் போற்றுவேன்
எந்தன் ஆசை ஏக்கம் நீர்தானே

உந்தன் அன்பை கண்டதாலே
எந்தன் உள்ளம் உம் அன்பை பாடாதிருக்குமோ

எங்கள் கால்கள் நடனம் ஆடி துதிக்கும்
உன்னதரே உந்தன் கிருபையை பாடுவோம்
உம் தயவை பாடுவோம்
எங்கள் நாவுகள் உம்மை போற்றி துதிக்கும்
உன்னதரே உந்தன் அன்பை பாடுவோம்
உம் தயவை பாடுவோம்-உந்தன் அன்பை


உம் இரக்கத்தை ஆடிப்பாடுவேன் – Um Irakkaththai Aadi paaduvean

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo