Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல்

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல்

பல்லவி

தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து
எல்லையை பெரிதாக்கும் தேவனே!

சரணங்கள்

1. தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம்
செழிப்பான இடத்தினில் கொண்டு வந்தீர்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றியே
ஏலீமையும் காணச்செய்தீர் – தீங்கென்னை

2. பொறாமையும், போட்டியும் நிறைந்த இவ்வுலகில்
எல்லைகள் திடனாய் நிற்கட்டுமே
யாபேசை ஆசீர்வதித்த தேவனே!
என்னையும் இன்று ஆசீர்வதியும் – தீங்கென்னை

3. இரட்டுக்கு நல்ல இரத்தாம்பரமாம்
சாம்பலுக்கு பதில் சிங்காரமாம்
ஊரை பூரிமாய் மாற்றின தேவனே!
புதிய காரியம் காணச்செய்வீர் – தீங்கென்னை

We will be happy to hear your thoughts

      Leave a reply