குறைவை நிறைவாக்கும் – kuraivai Niraivaakkum Song lyrics

Deal Score+3
Deal Score+3

குறைவை நிறைவாக்கும் – kuraivai Niraivaakkum Song lyrics

குறைவை நிறைவாக்கும் தெய்வம் நீரே நீர் ஒருவரே
என் வாழ்க்கையில் நிறைவான ஆவியாய் எந்தன் வாழ்வில்
நீர் தங்கிடும் இந்த வேளையில்-2

நான் அனாதையாய் அலைந்தேன் என்னை தேடி வந்தவரே
உம்மைப்போல யாருமில்லை என் வாழ்க்கையில்-2
நான் துக்கப்பட்டு திரிந்தேன் என்னை தேற்றிட யாருமில்லை
உம் தோளில் தூக்கி சுமந்து என்னை தேற்றினீரே-2

வாருமே என் இயேசுவே நீர் போதுமே எப்போதுமே-4

நான் பாவியாக பிறந்தேன் துரோகியாக இருந்தேன்
உம்மை மறுதலித்து வாழ்ந்தேன் வாழ்ந்தேன்-2
நீர் எனக்காக மரித்தீர் என் பாவங்களை சுமந்தீர்
உம் இரத்தத்தால் கழுவி என் வாழ்க்கையை மாற்றினீர்-2

வாருமே என் இயேசுவே நீர் போதுமே எப்போதுமே-8

We will be happy to hear your thoughts

      Leave a reply