மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu

Deal Score+2
Deal Score+2

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu

மீட்பர் பிறந்த நாளிது விரைந்து வாருங்கள்
மகிழ்ந்து கீதம் பாடுவோம் இணைந்து கூடுங்கள்
விண்ணும் மண்ணும் இணைந்ததே மீட்பின் ஒளி பிறந்ததே
தந்தை அன்பின் பாலனாய் பாவம் போக்க வந்ததே
விடியலாகும் நமது வாழ்வு என்றுமே.

வாழ்வும் வழியும் ஒளியுமான பாலகன்
வாசல் வந்து நம்மைக் காக்கும் இறைமகன் -2

1.வாக்கு மண்ணில் மனிதரானார் சொந்தமாய்
என்றுமே இம்மானுவேலாய் நம்மிலே..
போரும் பகையும் சூழ்ந்த இந்த உலகமே
வாரும் அமைதி காண அவர் பாதமே

வாழ்வும் வழியும் ஒளியுமான பாலகன்
வாசல் வந்து நம்மைக் காக்கும் இறைமகன் -2

2.மாட்டுக் கொட்டில் போதுமென்று ஏழையாய்
கண்ணுறங்கும் வான்அமுதின் காட்சியே
பசியும் பிணியும் நிறைந்த இந்த உலகமே
வாழ்வு தரும் உணவைக் காண வாருமே

வாழ்வும் வழியும் ஒளியுமான பாலகன்
வாசல் வந்து நம்மைக் காக்கும் இறைமகன் – 2

Meetpar pirantha nalithu song lyrics in english

Meetpar pirantha nalithu viranthu vaarungal
magilnthu Geetham paaduvom inainthu Koodungal
vinnum mannum inainthathae meetpin ozhi piranthathae
thanthai Anbin paalanaai paavam pokka vanthathae
vidiyalagum Namathu vaalvu entrumae

Vaalvum vazhiyum ozhiyumana paalagan
Vaasal Vanthu nammai kaakkum iraimagan -2

1.Vakku mannil manitharanaar sonthamaai
entrumae immanuvealaai nammilae
porum pagaiyum soolntha Intha ulagamae
vaarum amaithi kaana avar paathmae – Vaalvum

2.Maattu kottil pothumentru yealaiyaai
kannurangum vaan amuthin kaatchiyae
pasiyum piniyum niraintha Intha ulagamae
vaalvu Tharum unavai kaana vaarumae – vaalvum

    Jeba
        Tamil Christians songs book
        Logo