KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்

கிருபை என்னை சூழ்ந்ததால்
நான் தலை குனிவதில்லை
கிருபை என்னை ஆட்கொண்டதால்
அழிந்து போவதில்லை-2

அந்த மரத்தில் தூக்கப்பட்டு
என் சாபம் ஏற்றப்பட்டு-2
விடுதலை செய்ததால்
நான் உயரப் பறக்கின்றேன்-2-கிருபை

1.தள்ளி நின்று பார்க்கத்தான்
அருகதை இருந்த போது
என்னை அள்ளி அரவணைத்து
தம்மோடு இணைத்துக் கொண்டார்-2
குறை பல இருந்தபோதும்
நிறைவான வாழ்வைத் தந்தார்
தூரம் தூரம் போன போதும்
வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில்

2.எத்தனையோ நேரங்கள்
தகப்பனை நான் வெறுத்த போது
அத்தனைக்கும் சேர்த்து வைத்து
சிலுவையிலே திருப்பித் தந்தார்-2
சகதியால் சூழ்ந்த என்னை
குருதியால் வாழ செய்தார்
மேலிருந்து பார்த்தபோது
அவரையே என்னில் கண்டார்-மரத்தில்

We will be happy to hear your thoughts

      Leave a reply