
இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal
இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal
இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலே
வாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (2)
உம்மைப் போல் யாரும் இல்லையே
உம்மைப் போல் தெய்வம் இல்லையே (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை தேவனுக்கே
ஆராதனை ஆராதனை
ஆராதனை இயேசுவுக்கே (2)
1. கேரூபீன்கள், சேராபீன்கள்
பரிசுத்தர் என்று உம்மைப் பாடும் (2)
ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்பவரே (2)
2. பரிசுத்தமும், சத்தியமும்
சாவாமையுள்ள தெய்வம் நீரே (2)
மகிமையை உடையாய் அணிந்தவரே
மரணத்தை ஜெயித்தவரே (2)