Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்


Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்

எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்
தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உள்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்

1 .வாக்குத் தவறாது தேவன் உன்னை
வாக்கின்படி காத்தார் எண்ணிப்பார்
போக்கிடம் இன்றி நீ தவித்த வேளை
போஷித்துக் காத்ததை எண்ணிப்பார் – எண்ணி

2 .தாயும் தந்தையும் உள்னை மறந்தபோதும்
தாங்கி அணைத்ததை எண்ணிப்பார்
தாய் மறந்தாலும் நான் மறவேன் என
தயவாய்க் காத்ததை எண்ணிப்பார் – எண்ணி

3. அறியாமையுள்ள காலங்களைத்
தேவன் பாராமல் இருந்ததை எண்ணிப்பார்
அறிந்தும் அறியா செய்த பிழைகள்
அனைத்தும் பொறுத்ததை எண்ணிப்பார் – எண்ணி

4. தூரமாய்ச் சென்ற உன்னைத் தூக்கிச் சுமந்து
மந்தையில் சேர்த்ததை எண்ணிப்பார்
ஆரங்கள் சூட்டி அலங்கரித்து
ஆலயமாக்கினார் எண்ணிப்பார் – எண்ணி

5. சீக்கிரம் வருவேன் என்றுரைத்தவரை
சீக்கிரம் காண்பதை எண்ணிப்பார்
துயரங்கள் நீக்கி கண்ணீர் துடைத்து தம்
மார்போடு அணைப்பதை எண்ணிப்பார் – – எண்ணி

Ennippaar nee ennippaar
Devan seidha nanmaigal enniopaar
Kannin mani ena kaathu unnai tham
Karathil sumanthathai ennippaar

1 Vaaku thavaraadhu Devan unnai
Vaakinpadi kaathaar ennippaar
Poakkidam indri nee thavitha veilai
Poashithu kaathadhai ennippaar

2 Thaayum thandhaiyum unnai marandha poadhum
Thaangi anaithadhai ennipaar
Thai marandhaalum naan maravein ena
Dhayavaai kaathadi ennippaar

3 Ariyaamai ulla kaalangalai Devan
Paaraamal irundhadhai ennippaar
Arindhum ariyaa seidha pilaigal
Anaithum poruthadhai ennippaar

4 Dhooramaai sendra unnai thooki
sumandhu Mandhaiyil seirthadhai ennippaar
Aarangal sooti alangarithu
Aalayam Kinnar ennippaar

5 Seekiram varuvein endruraithavarai
Seekiram kaanbadhai ennippaar
Thuyarangal neeki kanneer thudaithu tham
Maarboadu anaippadhai ennippaar

We will be happy to hear your thoughts

      Leave a reply