
En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே
என் ஆத்துமாவே! என் முழு உள்ளமே!
உன்னதன் உத்தம நாமத்தை ஸ்தோத்திரி
வையகத்திலுனக்கு மெய்யன் மனதிரங்கிச்
செய்த உபகாரம் மறவாமல்
பாவத்திலமிழ்ந்திப் பிணியினால் வருந்திச்
சாபக் குழியில் வீழ்ந்து ஆபத்தில் நிற்கையில்
மீட்டுனக்கிரக்கம் கிருபை என்னும் முடியைச்
சூட்டிய கர்த்தனை நிதம் நினைத்து – என்
பெற்ற பிதாப்போல் பரிதபித்தணைப்பார்
பற்றிடும் அடியோர் முற்றும் பயப்படில்
அக்கிரம மெல்லாம் கர்த்தன் கருணையால்
ஆக்கினையின்றி அகற்றிடுவார் – என்
மாமிச மெல்லாம் வாடும் புல்தானே
பூவில் வளர்ந்திடில் வயலின் பூவாமே
கர்த்தன் கருணைக்குக் கரையென்பதில்லையே
நித்தியமாக நிலைத்திடுமே – என்
துதித்திடுவீரே தூத கணங்களே
ஜோதியாயுள்ளவர் கோடி சேனைகளே
இராஜ்ஜியங்களிலவர் காட்டிய கிரியைக்காய்ச்
சாட்சிகள் நாம் துதி சாற்றிடுவோம் – என்