தேவனைத் துதியுங்கள் – Devanai Thuthiyungal eppothum Tamil chritian song lyrics
தேவனைத் துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்
தேவனைத் துதியுங்கள் ஆ.. ஆ..ஆ..ஆ
1. தேவனைத் துதியுங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்
எப்போதும் துதியுங்கள் அல்லேலூயா
வல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய்
அவரை துதியுங்கள் எப்போதுமே
2. மாட்சியுள்ள மகத்துவங்களுக்காய்
அவரை துதியுங்கள் எப்போதுமே
எக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்
அவரை துதியுங்கள் எப்போதுமே
3. தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்
அவரை துதியுங்கள் எப்போதுமே
கைத்தாள ஓசை பேரோசை மேளத்தோடும்
அவரை துதியுங்கள் எப்போதுமே
4. வல்லமையுள்ள அவரின் கிரியைக்காய்
அவரை துதியுங்கள் எப்போதுமே
சுவாசமுள்ள யாவும் கர்த்தரை
துதிப்பதாக என்றும் அல்லேலூயா