
Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை
அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2
அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா .
1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும்
போதாது போதாது போதாதையா
உம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்பு
உம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் .
2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும்
போகாது போகாது போகாதையா
நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்
நீர் என்னை காத்துக்கொள்வீரே
நீர் என்னை மறைத்திடுவீரே .