Anbu pani seiya Ennai Alaithavanae song lyrics – அன்புப்பணி செய்ய என்னை

Deal Score0
Deal Score0

Anbu pani seiya Ennai Alaithavanae song lyrics – அன்புப்பணி செய்ய என்னை

அன்புப்பணி செய்ய என்னை அழைத்தவனே
என் மீட்பரான இறைமகனே
அருள்நிறை வாழ்வு வாழ்ந்திடவே
அடியவன் என்னை தேர்ந்தவனே

 1.எங்கும் நிறைந்த எந்தன் இறையே
    எந்தன் இதயம் நீ வராய்
    பொங்கும் உந்தன் அருள்நதியை
    எம்மில் பாயச் செய்திடுவாய்
    நன்மைகள் செய்து நான் உயர நண்பனாக நீ வந்திடுவாய்

 2.மானிட வாழ்வு ஏற்றம் பெறவே
    ஏழை எனை நீ அழைத்தாயோ
    வலியவர் நிறைவு பெற்றிடவே 
    அடியேன் எனை நீ அழைத்தாயோ
    புதுமைகள் புரிந்து உன்னில் வளர ஆயனாக நீ வந்திடுவாய்

Anbu pani seiya sung by Fr. Victor அழைத்தல் பாடல்

    Jeba
        Tamil Christians songs book
        Logo