அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
பல்லவி
என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்
மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை — என்
முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகத்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர — என்
வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே — என்
நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் எப்படி பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே — என்