தேவ மகனின் தாயவள் – Deva Maganin Thaaiyaval

Deal Score+1
Deal Score+1

தேவ மகனின் தாயவள் – Deva Maganin Thaaiyaval

1.தேவ மகனின் தாயவள்! வேண்டும் வரம்தனை தருபவள்!
வாடும் இதயத்தின் ஊற்றவள்! காணக்கிடைக்கா அழகவள் -2
தாயே எங்கள் மாமரி! மாதா எங்கள் மாதா – 2 (Chorus)
அருட்தூயவள்! எங்கள் மாமரி கன்னித்தாயாவள்!
மனம் உருகியே! நின்று வேண்டினாள் அருள் தருபவள்!
மரியே! வேளாங்கண்ணி தாயயே!

2.விண்ணோர் போற்றும் தூயவள் ! கண்ணீர் துடைக்கும் தாயவள்!
தேடும் இதயத்தின் ஆறுதல்! விண்ணரசியே மாதா! -2
அம்மா எங்கள் மாமரி ! தாயே நீ வாழ்க! – 2 (Chorus)
தூய கன்னியே! எங்கள் மாமரி! நீ வாழ்கவே!
அன்பு தாயிடம்! மனதுருகினால்! ஆசி தருபவள் !
அம்மா! ஆரோக்கிய தாயே!

3.வார்த்தையானவரின் தாயவள்! தந்தை கடவுளின் ஆசியவள்!
வான தூதரின் வாழ்த்தவள்! மீட்பர் ஏசுவின் தாயவள்! -2
தாயே! எங்கள் மாமரி! அம்மா! எங்கள் தாய்மரி! – 2 (Chorus)
தூய ஆவியால்! கருத்தாங்கிய ! கன்னி தாயவள் !
ஜெபமாலையில்! மனம் உருகினால்! ஜெயம் தருபவள்!
அம்மா! ஜெபமாலை தாய்யே!

4.விண்ணேர்ப்படைந்த தாயவள்! விண்ணுலகின் வாசலே!
உலக மீட்பரின் தாயவள்! விண்மீன் சூடிய அழகவள்! – 2
தாயே எங்கள் மாமரி! மாதா எங்கள் மாதா! – 2 (Chorus)
எங்கள் அரசியே! இறை அன்னையே! எங்கள் தாய் நீயே!
மனம் மாறியே! உம்மை வேண்டினாள் !அருள் தருபவள்!
மரியே! விண்ணரசி மாதாவே!

5.கதிரவனை ஆடையாய்! அணிந்த எங்கள் மாமரி!
அமலோற்பவமே! தாய் நீயே! தூய கன்னி தாய்மையே ! 2
சாரோனின் மலர் அழகவள்! அழகே எங்கள் மாதா!
சாரோனின் மலர் அழகவள்! மாதா எங்கள் மாதா (Chorus)
தூய கன்னியே! இறை பேழையே ! எங்கள் தாய்நீயே!
தூய வாழ்க்கையே! நாங்கள் வாழவே! அருள் தருகவே !
மரியே! அமலோற்பவ தாயே!

6.வாழ்வோர்! அனைவரின் தாயவள் ! வானுலகின் வழியவள்!
படைத்தவரின் தாயவள் ! பிணிகள் தீர்க்கும் தாய்மரி ! -2
அம்மா எங்கள் தாயே! மாதா ! எங்கள் மாதா – 2 (Chorus)
பிள்ளை வரம் தரும்! எங்கள் தாயவள்! எங்கள் மாமரி!
உம் பாதமே ! நாங்கள் தேடினோம் ! கண்பாரம்மா!
அம்மா! வாழ்வோரின் தாயே!

Jeba
      Tamil Christians songs book
      Logo