Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா
அப்பா அப்பா இயேசு அப்பா
எப்போதுமே உமக்கு ஸ்தோத்திரமப்பா
1. தப்பா தப்பா நான் நடந்தேனப்பா
தப்பாமல் என்னைத் தேடி வந்தீரப்பா
2. செத்தே செத்தே நான் வாழ்ந்தேனப்பா
சாகாத நித்திய ஜீவன் தந்தீரப்பா
3. நித்தம் நித்தம் எந்தன் கரம்பிடித்து
நித்திய வழிதனில் நடத்தினீரப்பா-என்னை
4. அப்பா அப்பா எங்க அப்பா
புத்திர சுவிகாரம் தந்தீரப்பா-எனக்கு
5. எந்தன் மேல் வைத்த அன்பினாலே
எத்தனையோ அற்புதங்கள் செய்தீரப்பா