வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey
வா வா மகனே எழுந்திடு
உந்தன் படுக்கையை எடுத்திடு
வா வா மகனே எழுந்திடு
உந்தன் படுக்கையை எடுத்திடு
இனியும் கவலை உனக்கில்லையே
புதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையே
இனியும் கவலை உனக்கில்லையே
புதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையே
உனக்கென்று ஒருவரும் இருந்ததில்லை
உதவிட ஒருவரும் வரவும் இல்லை
வெறுமையும் தனிமையும் உறவாய்க் கண்டாய்
வெயிலிலும் மழையிலும் தனியாய்க் கிடந்தாய்
சுகம் தேடி வந்து கிடைக்காமல் இன்று
இதுதான் விதியென்று இருந்தாய்
இனி எங்கு சென்று நீ வாழ்வது என்று
விதியை உன் வாழ்வாக்கினாய்
நீ பட்ட வேதனை நான் அறிவேன்
தந்தையின் சொல்வரக் காத்திருந்தேன்
இனியும் வேதனை உனக்கு இல்லை
குளத்தில் நீ இறங்கிட தேவை இல்லை
உன் வேண்டுதலும் உன் கண்ணீரையும்
நான் காண்கின்றவர் அல்லவா
உன் படுக்கையினை எடுத்து நட
உன் சிருஷ்டிகர் நான் சொல்வதால்