
இயேசு வருவார் மேகமீதிலே – Yesu Varuvaar Megameethilae
இயேசு வருவார் மேகமீதிலே இயேசு வருவார்
நம்மை ஆயத்தமாக்குவோம்
(1)
யுத்தங்களும் யுத்தச் செய்திகளும்
தேசங்ளிலெல்லாம் கேட்டீடுதே
நம்மை ஆயத்தமாக்குவோம்
(2)
பூமியதிர்ச்சியும் கொள்ளை நோய்களும்
பஞ்சங்களும் வருகையின் அடையாளமே
நம்மை ஆயத்தமாக்குவோம்
(3)
அசுத்தங்களும் மிகுதியாகுதே
தேவ அன்பு தணிந்து போகுதே
நம்மை ஆயத்தமாக்குவோம்
(4)
சமுத்திரங்களும் கொந்தளிக்குதே
வானத்தின் சத்துவங்கள் அசைகிறதே
நம்மை ஆயத்தமாக்குவோம்