மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha

Deal Score0
Deal Score0

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha

மேலான அன்பு வைத்த
மேலான என் இயேசுவவே
மேலான பாசம் வைத்த
மேலான என் இயேசுவே

உம்மை புகழ்கின்றோம்
உம்மை வாழ்த்துகின்றோம்
உம்மை வணங்குகின்றோம்
உம்மை போற்றுகின்றோம் – மேலான


நான் விழுந்திடும் போதும்
என்னை மறப்பதில்லை
நான் உடைந்திடும் போதும்
என்னை மறப்பதில்லை
என்னை தாலாட்டி வளர்த்த
என் மேலானவரே
என் மேல் அன்பு காட்டி வளர்த்த
என் மேலானவரே – மேலான


என் துக்கநாட்களில்
என்னை மறப்பதில்லை
என் துன்ப நாட்களில்
என்னை மறப்பதில்லை
நாளெல்லாம் புதிதாக்கும் ஆவியானவரே
என்னை காலமெல்லாம்
காப்பாற்றும் கர்த்தாவே – மேலான


பெற்ற தாய் என்னை மறந்தாலும் மறப்பதில்லை
என் தந்தை மறந்தாலும்
மறப்பதில்லை
எப்போதும் என் நினைவாய் இருப்பவரே
என் நினைவெல்லாம் நிறைந்திட்ட
நிறைவானவரே – மேலான

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo