எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam

Deal Score0
Deal Score0

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam

எந்தன் நெஞ்சம் எல்லாம்
நன்றி சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே [2]

ஆராதனை செய்வோம்
நன்றி என்றும் நான் மறவேன் [எந்தன்]

நோயின் கொடுமையிலே ஓ
மரண படுக்கையிலே ஓ
கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து
கலங்கி தவித்த நேரத்திலே – இனி
பிழைப்பேனோ என்ற நிலமையிலும்
ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரே
இயேசைய்யா நீர் எனது மூப்பியனே [எந்தன்]

எதுக்கும் உதவாத ஒ
குப்பை நான் ஐயா ஓ
அற்பமான என்னையும் தூக்கி
உமக்காய் தெரிந்து கொண்டீரே
எல்லோருமே என்னை வெறுக்கையிலே
உந்தன் பார்வைக்கா நான் அருமையானேன்
இயேசைய்யா நீர் என்னையும் அழைத்தீரே [எந்தன்]

சிரித்தபோதெல்லோரும் ஓ
கூட சிரித்தனரே ஓ
அழுதபோது யாரும் இல்லையே
நான் மட்டும் தானே அழுதேன்
என் வாழ்விலும் என் தாழ்விலேயும்
இன்பதுன்பமோ எந்த நிலையிலும்
பிரியாமல் நீர் கூட இருக்கின்றீரே [எந்தன்]

கண்ணீரோடு நன்றியை காணிக்கையாக்குகிறேன் [எந்தன்]

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo