வனாந்திரம் செழிப்பாய் மாற – Vanaanthiram sezhippai maara song lyrics
வனாந்திரம் செழிப்பாய் மாற
வழியாய் வந்தவரே
கண்ணீர் துளிகள் களிப்பாய் மாற கரங்களை பிடித்தவரே
இமை பொழுதே மறந்தாலும்
இது வரைக்கும் நீர் விடவே
இல்லை(2)
இதயம் கலங்கினதே
கண்கள் குளமானதே
துக்கங்களால் தூக்கமெல்லாம்
தூரமாய் போனதே
துன்பத்திலே துணையாய்
வந்தீர் இது வரைக்கும் நீர்
விடவே இல்லை(2)
தனிமையில் நான் அலைந்தேன்
தாங்கிட யாருமில்லை
தாய் போல அணைத்தீரே தகப்பனாய் சுமந்தீரே
தனிமையிலே துணையாய்
வந்தீர் இது வரைக்கும் நீர்
விடவே இல்லை ( 2)