Valal Yesu Varthai Namil song lyrics – வள்ளல் இயேசு வார்த்தை

Deal Score0
Deal Score0

Valal Yesu Varthai Namil song lyrics – வள்ளல் இயேசு வார்த்தை

வள்ளல் இயேசு வார்த்தை நம்மில்
வந்து கதவைத் தட்டுதே
வானகத் தந்தை ஆவியார் அன்பு
வளமாய் உள்ளம் கொட்டுதே – 2
மகிழ்ந்து மகிழ்ந்து ஆடுவோம்
புகழ்ந்து புகழ்ந்து பாடுவோம் – 2
ஆகா ஆகா VBS
ஆனந்தத்தின் VBS
ஒகோ ஒகோ VBS
ஓங்கும் புகழ் VBS – 2

  1. ஆண்டவர் இயேசுவின் அரும் செயல்கள்
    அழைக்கின்றன நம்மை வந்திடுவோம்
    ஆசை பொங்க அவற்றைப் படித்து
    அகத்தில் பதித்து வாழ்ந்திடுவோம் – 2
  2. போதனை நமக்குப் புரியும் விதமாய்
    புரட்சியாய் இயேசு எடுத்துரைத்த
    உவமைகள் சொல்லும் உண்மைகள் தன்னை
    உணர்வு பொங்கக் கேட்டிடுவோம் – 2
  3. இதயத்தைத் திறந்து எழுப்பிடும் செபங்கள்
    இருக்குது ரொம்ப விவிலியத்தில்
    என்றும் அவற்றை நாமும் செபித்து
    இறையருள் பெற்று மகிழ்ந்திடுவோம் – 2
  4. கிறிஸ்தவ மறையை அழிப்பேன் என்று
    கிளம்பிய பவுலும் மனந்திரும்பி
    கிறிஸ்தவம் தழைக்க உழைத்த கதையை
    கேட்டு அவர்போல் வாழ்ந்திடுவோம் – 2

RC Catholic VBS Tamil song lyrics – Vallal Yesu Vaarthai Nammil

    Jeba
        Tamil Christians songs book
        Logo