சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்
நினைவாய் இருப்பவரே…
என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்….
உம்மை வாஞ்சிக்கிறேன்…
கர்த்தாவே நான் நிலையற்றவன்…
என் கால்களை ஸ்திரப்படுத்தும்- என் பெலனும்
1.தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே….2
தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே..2 கர்த்தாவே…
2. உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே…2
உயிருள்ள வரையில் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே…2 கர்த்தாவே…
We will be happy to hear your thoughts