குயவனே குயவனே படைப்பின் – kuyavane kuyavane kuyavane Padaippin lyrics
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே
விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே
மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே
அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு.
And the gold of that land is good: there is bdellium and the onyx stone.
ஆதியாகமம் | Genesis: 2: 12
- எதை நினைத்தும் – Ethai Ninaithum
- Neer Enna Marakala – நீர் என்ன மறக்கல
- Ulagin Meetparae – உலகின் மீட்பரே
- ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan Eesaakkin Devan
- அப்பா அப்பா இயேசு அப்பா – Appa Appa Yesu Appa