கலங்காதே திகையாதே என் – Kalangathae Thigaiyathae song lyrics

கலங்காதே திகையாதே என் – Kalangathae Thigaiyathae song lyrics

உடைந்து போன என் நண்பனே
என் ஆண்டவர் உன் பக்கம் இருக்கிறார்
உன் வாழ்வை இழந்த என் பிரியமே
உன்னை அணைக்கும் தேவன் இருக்கிறார்

கலங்காதே திகையாதே என்
நேசர் உனக்காக மரித்தாரே
நம்மை காக்கும் ரட்சகர் ஜீவிக்கிறார்
உடைந்து போன என் நண்பனே

1.) உற்றார் சுற்றார் மறந்தாலும்
உன்னை மறவாத நேசர் ஒருவரே
நண்பரும் பெற்றோரும் கைவிடலாம்
உன்னை கைதூக்கி எடுத்த நேசர் அவரே
உன்னை கரை சேர்க்கும் காவலன் ஏசுவே
உடைந்து போன என் நண்பனே

2.) ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
உன் பக்கம் விழுந்தாலும் கவலையில்லை
ஆழ்கடலில் நடந்தவர் உன்னோடயே
உன் கதறுதலின் ஜெபத்திற்கு பதில் அவரே
உன் கண்ணீரை துடைக்கும் கர்த்தர் பரனே
உடைந்து போன என் நண்பனே

We will be happy to hear your thoughts

      Leave a reply