ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics
- ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம் — (2) - ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர் –ஜெபமே - ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் –ஜெபமே - இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூரெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம் –ஜெபமே
- Jebathai ketkum engal deva
Jebathin vaanjai thandharulum
Jebathile tha-rithirundhu
Jebathin meenmai kaana saiyumJebame jeevan jebam jayam
Jeeviyathirkku idhuve sattam — (2)
2. Ookathudane oor mugamai
Vaakuthathathai patri kondu
Nokathaiyellam nermaiyakki
Ketkumbadi kirubai saiyum — Jebame
3. Aagatha nokam sindhanayai
Agatrum engal nenjai vittu
Vaagana thaakkum manamellam
Vallamaiyode vendikollum — Jebame
4. Idaividaamal jebam seiya
Idaiyurellam neekkividum
Sallaipillamal undhan padham
Kadaisimattrum kaathiruppom — Jebame