Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே

Deal Score0
Deal Score0

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே

என்னை மீட்க வந்தவரே
என்னைத் தேடி வந்தவரே
என்னோடு வாழ வந்த இயேசு பாலனே – 2
வண்ண பூவாய் மண்ணில் வந்த இயேசு பாலனே
எங்கள் ஏக்கம் தீர்க்க வந்த செல்ல பாலனே

பனி விழும் இரவில் பாவங்கள் போக்க
மழலை வடிவில் பிறந்தாயோ
என் வாழ்விலே நீ வந்ததால்
எந்நாளும் ஆனந்தமே
ஆராரிரோ..ஆரிராரிரோ..

விண்ணிலே தூதர்கள் மகிழ்ந்து பாடிட
மண்ணிலே அமைதி தந்திடவே
எந்நாளுமே எனை காத்திட
எனக்காக பிறந்த தெய்வமே
ஆராரிரோ..ஆரிராரிரோ.

பாடற்குழு :
அற்புத மாதா பங்கு,கீழ்நாத்தூர், திருவண்ணாமலை.

பாடல் மற்றும் இசை :
அருட்பணி. செல்வநாயகம்.OSM

இசை இயக்கம் :
ஜெர்சன், கோல்டன் ஸ்டூடியோ,தஞ்சாவூர்.

பாடகி :
அகஸ்டினா, தஞ்சாவூர்.

    Jeba
        Tamil Christians songs book
        Logo