என் நேசர் ஏசுவின் மேல் – En nesar yesuvin mel Song lyrics

என் நேசர் ஏசுவின் மேல் – En nesar yesuvin mel Song lyrics

என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே
துன்ப வனாந்தரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்

1.லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பாலிலும் வெண்மை தூயப்பிதா
பூரண ரூப சௌந்தர்யமே
பேர் சிறந்த இறைவா

2.கன்னியர்கள் நேசிக்கும் தேவா
கர்த்தரின் நாமம் பரிமளமே
இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்
என்னையும் இழுத்துக் கொண்டார்

3.நேசக் கொடி மேல் பறந்தோங்க
நேசர் பிரசன்னம் வந்திறங்க
கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன்
கர்த்தர் என் ஆறுதலே

4.நாட்டினிலே பூங்கனி காலம்
காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்
கன்மலை சிகரம் என் மறைவே
இந்நேரமே அழைத்தார்

5.நேசத் தழல் ஏசுவின் அன்பே
நேசம் மரணம் போல் வலிதே
வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
உள்ளம் அணைந்திடாதே

6.தூய ஸ்தம்பம் போலவே
எழும்பி தேவ குமாரன் வந்திடுவார்
அம்மினதாபின் இரதம் போல
அன்று பறந்து செல்வேன்

We will be happy to hear your thoughts

      Leave a reply