
En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன்
என் தேவா உம்மை பாடுவேன் இனி
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
என்னுயிரே எந்தன் இயேசுவே முழு
மனதால் ஸ்தோத்தரிப்பேன்
எனது வலதுப்பக்கம் நீரே
அசைக்கப்படுவதில்லை நானே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதே
எந்தன் வாழ்வினிலே
நினைத்து நினைத்து நன்றி
சொல்லத்தானே ஆயுள் போதாதே
மலர் போல் உதிர்கின்ற வாழ்வை
நன்றி சொல்லி கழித்திடுவேன்
உண்மையாய் உம்மை கூப்பிடும் போது
நெருங்கி அருகில் வந்தீர்
உருகி உருகி ஜெபித்திடும் போது
உன்னத பெலன் அளித்தீர்
உலகத்தையே நான் மறந்து
உம்மையே நினைத்திடுவேன்
எந்த பக்கமும் நெருக்கப்பட்டும் நான்
ஒடுங்கிப் போகவில்லை
துன்பத்திலே நான் அமிழ்ந்திட்ட போதும்
கைவிடப்படவுமில்லை
இயேசுவே என் பக்கபலமே
இயேசுவே என் துணையே