எல்லாமே நீர் தந்தது – Ellamae neer thanthathu song lyrics
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது… – 2
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது… – 2
1.வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்… – 2
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)
2.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… – 2
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)
3.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… – 2
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது… – 2 (எல்லாமே…)