தேவாதி தேவன் ராஜாதி – Devathi Devan Rajathi Rajan

Deal Score0
Deal Score0

தேவாதி தேவன் ராஜாதி ராஜன் – Devathi Devan Rajathi Rajan Tamil Christian old tamil Christmas song lyrics, written and sung by Sarah Navaroji

தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
பாவ உலகினில் வந்துதித்தார்
ஏரோது மாளிகை தேடாத மாராஜன்
ஏழை தொழுவத்தில் ஜெனித்தவர்

  1. வானத்தில் தோன்றும் ஓர் நட்சத்திரம்
    வான சாஸ்திரிகள் முன்னில் சென்றாலும்
    பாதை தவறியே சோகமடைந்த பின்
    பாலகன் இயேசுவைக் கண்டடைந்தார்
  2. அன்னை மரியாள் அளவில்லாத
    ஆசீர்வாதங்கள் மிக அடைந்தாள்
    அந்த கிருபைகள் சொந்தமுடன் பெற
    ஆண்டவர் இயேசுவைக் கண்டடைவோம்
  3. சத்திரத்திலே ஸ்தலமில்லையே
    சத்திய தேவன் தலை சாய்க்கவே
    தாழ்மை சொரூபியே தாழ இறங்கியே
    தங்கும் தொழுவத்தை கண்டடைந்தார்
  4. ஆண்டவர் பிறந்த பெத்லகேம்
    ஆயிரங்களில் சிறிய ஸ்தலம்
    இஸ்ரவேல் ராஜனை இம்மானுவேலனை
    இன்பமுடன் தேடி கண்டடைவோம்
  5. கண்ணார கண்டேன் உம் இரட்சண்யத்தை
    காலா காலமாகக் காத்திருந்தேன்
    என்று சிமியோன் தன் கையில் எடுத்து
    நம் இயேசுவை வாழ்த்தியே கண்டடைந்தான்
  6. தள்ளின கல்லே தலைக்கல்லாக
    தாமதமின்றி வருகின்றவர்
    ஆயர் குடிலிடை பாலகனாய் தோன்றும்
    தூய பிதாமுகம் கண்டடைவோம்

Devathi Devan Rajathi Rajan song lyrics in English

Devathi Devan Rajathi Raajan
Paava ulaginil Vanthuthithaar
Yearothu Maaligai Theadatha Maarajan
Yealai Tholuvaththil Jenithavar

1.Vaanththil Thontrum Oor Natchathiram
Vaana Saasthirigal Munnil Sentralum
Paathai Thavariyae sogamadaintha Pin
paalagan Yesuvai Kandadainthaar

2.Annai Mariyaal Alavillatha
Aaseervathangal Miga Adainthaal
Antha Kirubagai Sonthamudan Pera
Aandavar Yesuvai Kandadaivom

3.Saththirathilae Sthalamillaiyae
Saththiya Devan Thalai Saaikkavae
Thaazhamai sorubiyae Thaazha Irangiyae
Thangum Thozhuvaththai Kandadainthaar

4.Aandavar pirantha Bethelgam
Aayirangalil Siriya Sthalam
Isravel Rajanai Immanuvelanai
Inbamudan Theadi Kandadaivom

5.Kananra Kandean Um Ratchanyathai
Kaala kaalamga Kaathirunthean
Entru Simiyon Than Kaiyil Eduthu
Nam yesuvai Vaalthiyae Kandadainthaan

6.Thallina Kallae Thalaikkalaga
Thamathamintri Varukintravar
Aayar Kudilidai Paalgananaai Thontrum
Thooya Pithamugam Kandadaivom

Jeba
      Tamil Christians songs book
      Logo