Karam koopi Unnai Tholuthean song lyrics – கரம் கூப்பி உன்னை தொழுதேன்
Karam koopi Unnai Tholuthean song lyrics – கரம் கூப்பி உன்னை தொழுதேன்
கரம் கூப்பி உன்னை தொழுதேன் நான் எழுந்திட வலுவானாய்
வரமாகி என்னில் நிறைந்தாய் நான் உயர்ந்திட உரமானாய்
இரங்கிடும் மனங்களில் நீயென
நிறைந்திடும் கருணையின் இறைவனே
நன்றி சொல்லி பாடுகிறேன் கானம்
உன் அன்பாலே உருவான இராகம்
- முள்நிறைந்த பாதையை மலராக்கினாய்
அலைகடலை கடக்க படகானாய்
அத்தனையும் இறை உந்தன் கொடையானது
நன்றி என்ற ஒரு வார்த்தை குறைவானது
நன்றி சொல்லி பாடுகிறேன் கானம்
உன் அன்பாலே உருவான இராகம் - பகையினால் உறவிழந்தேன் பரிவு கொண்டாய்
உவகையால் இணைந்திட வழியும் சொன்னாய்
வீழ்ந்திடும் இடர்களில் அரணானது
ஆயனாம் உனதன்பு நிறைவானது
நன்றி சொல்லி பாடுகிறேன் கானம்
உன் அன்பாலே உருவான இராகம்
Karam koopi sung by Fr.Victor கரம் கூப்பி உன்னை நன்றி பாடல்