Yesuvin Naamam Oongidavae Nesamudan song lyrics – இயேசுவின் நாமம் ஓங்கிடவே
Yesuvin Naamam Oongidavae Nesamudan song lyrics – இயேசுவின் நாமம் ஓங்கிடவே
- இயேசுவின் நாமம் ஓங்கிடவே
நேசமுடன் புகழ் பாடிடுவோம்
காசினியில் நிகர் வேறதற்கில்லை
தாசர்கள் நாம் துதி சாற்றிடுவோம்
வானமும் பூமியும் யாவையுமே
வார்த்தையினால் உண்டாக்கினவர்
என்னை மண்ணென்று நினைவாக்கினவர்
எனக்கென்றும் சொந்தமவர்
- அற்புதமாம் அதிசயமாம்
ஆண்டவர் இயேசுவின் நாமமதே
பேய் நடுங்கும் கடும் நோய் அகலும்
நல் பேர் புகழ் ஓங்கிடும் நாமமதே - வாழ்ந்திடும் வானோர் பூதலத்தோர்
வாழ்த்தி வணங்கிடும் நாமமதே
மானிடரின் முழங்கால் முடங்கும்
மெய் மேன்மை உயர் திரு நாமமே - சாவு பயங்கள் நீங்கிடவே
சத்துரு மேல் ஜெயம் பெற்றிடவே
சோதனையில் பல வேதனையில்
என் சொந்த அடைக்கல நாமமதே - வந்துன்னைச் சேர்ப்பேனென்றுரைத்த
வல்ல கிறிஸ்தேசுவின் நாமமதே
நீடுழியாய் நித்திய ராஜ்யத்திலே
தம் நாமமதை நான் போற்றிடுவேன்.
Yesuvin Naamam Oongidavae Nesamudan song lyrics in English
Yesuvin Naamam Oongidavae
Nesamudan Pugal Paadiduvom
Kaasiniyil Nigar Vearatharkillai
Thaasargal Naam Thuthi Saattriduvom
Vaanamum Boomiyum Yaavaiyumae
Vaarthaiyinaal Undakkinavar
Ennai Mannentru Ninaivakkinavar
Enakentrum Sonthamavar
2.Arputhamaam Athisayamaam
Aandavar Yesuvin naamamathae
Peai Nadungum Kadum Noai Agalum
Nal Per pugal oongidum namamathae
3.Vaalnthidum Vaanoar poothalothar
Vaalthi Vanangidum namamathae
Maanidarin Mulankaal Mudangum
Mei Meanmai Uyar Thiru namamathae
4.Saavu Bayangal Neengidavae
Sathuru Mael jeyam pettridavae
Sothanaiyil Pala vedhanaiyil
En Sontha Adaikkala namamathae
5.Vanthunnai searpeaneantruraitha
Valla kiristhesuvin namamathae
Nrrduzhiyaai Niththiya Raajyaththilae
Tham namamathae Naan Pottriduvean
Sis.சாராள் நவரோஜி
R-Disco T-115 D 2/4