Pin Adaivadhillai Naan Tamil Christian Song lyrics – பின்னடைவதில்லை நான்
Pin Adaivadhillai Naan Tamil Christian Song lyrics – பின்னடைவதில்லை நான்
ஒரு திரளாய்த் திரண்டாலும் ஒருவராய் நிற்கிறீர்
மறுமுனையை கண்டு சற்றும் பின்னடைவதில்லை
பின்னடைவதில்லை நான் பின்னடைவதில்லை
பின்னடைவதில்லை நான் பின்னோக்கி செல்வதில்லை
சீறிய கூட்டமே பின்னோக்கி சென்றது
சிவந்த மேனியோ முன்னோக்கி வென்றது
என்மேலே எழும்பினவன் அவன் கோஷம் அடங்க செய்தீர்
கர்த்தரின் வார்த்தையில் வல்லமையுள்ளது
நேசரின் கிருபை என்றும் உள்ளது – அதனால் பின்னடைவதில்லை
அந்நியன் முனை விழுந்து போயிற்று
பாகாலின் பகட்டு பலனற்று போயிற்று
அவர் எனக்காய் பழிவாங்கி
என் காலை மான் காலாக்கினீர்
கிருபையால் என்னை நடத்தி செல்லுவார்
உயர் ஸ்தலங்களில் அமர பண்ணுவார்- அதனால் பின்னடைவதில்லை