Enakinbam Ethennu Kelu – எனக்கின்பம் ஏதெனக் கேளு

  1. எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன்
    என் பாரம் நீங்கிற்றே
    வம்பன் வந்தென்னை நோக்கி , நீங்கிற்றென்றால்
    தெம்பாய் நீங்கிற்றென்பேன்
    பல்லவி
    அதைக் கல்வாரியின் ரத்தத்தால் மூடியாச்சுதே
    அவை வானம் பூமி போல நீங்கிற்றே
    அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே
    ஆமென் சுத்தமானேன்
  2. அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார்
    என் பாரம் நீங்கிற்றே
    என் உள்ளம் பொங்கிட்டதே பிசாசோடிப் போனான்
    அன்றே சுகமானேன் — அதை
  3. சாத்தான் என்னிடம் வந்து சந்தேக மூட்டினால்
    சீ போ நீங்கிற்றென்பேன்
    நீ துன்பத்துள் ஆக்கிட்டாய் என் இயேசென்னை மீட்டார்
    நேசர் சுகம் தந்தார் — அதை
  4. எப்போதும் நேசருடன் என் நாளெல்லாம்
    அப்போதென் பாக்கியமாம்
    தப்பாது பாட்டுப்பாடி ஜெபித்துப் போற்றுவேன்
    ஆஹா பேரின்பமே — அதை
We will be happy to hear your thoughts

      Leave a reply