வானமும் பூமியும் படைத்தவரே – Vaanamum Boomiyum Padaithavare

Deal Score+1
Deal Score+1

வானமும் பூமியும் படைத்தவரே – Vaanamum Boomiyum Padaithavare

வானமும் பூமியும் படைத்தவரே
வல்ல தேவனே எனதரசே -2
எந்தன் ஒத்தாசை பர்வதமே
எந்தன் கண்களை ஏறெடுப்பேன் -2

1. மலைகள் பெயர்ந்து மாறிடினும்
நிலைகள் தகர்ந்து போயிடினும் -2
மாறாத உந்தன் கிருபையாலே
ஆறுதல் எனக்கு அளித்தவரே -2

2. என்னை காப்பவர் உறங்காரே
எந்தன் தேவன் துணையாவார்
எல்லா தீங்குக்கும் காப்பவரே
சேதங்கள் ஒன்றும் அணுகாதே

3. வலப்பக்கம் எந்தன் நிழல் நீரே
வழுவாது காத்திடும் கன்மலையே
அற்புத அதிசயம் செய்பவரே
என்றும் எங்கள் துணை நீரே

4. எந்தன் புகலிடம் நீர் தானே
அஞ்சிடும் நேரம் அணைப்பவரே
பயங்கள் யாவும் அகற்றினீரே
பாரில் எந்தன் துணை நீரே

5. அடைக்கலம் எனக்கு நீர் தானே
கோட்டை மதிலாய் நிற்பவரே
ஆயுதம் ஒன்றும் வாய்க்காதே
எந்த நேரமும் ஜெயம் தானே

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo