நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae
நெருக்கத்திலே நெருக்கத்திலே
நெருங்கி வந்தாரையா இயேசு
(1)
பாசமாய் பேசும் மனிதர்கள் கூட
நேசம் போல் வந்து பகைக்கின்றனர்
யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
நேசர் இயேசுவிடம் எல்லாம் சொல்வேன்
(2)
ஆகாதென்று தள்ளின கல்லே
மூலைக்குத் தலை கல்லாயிற்று
ஆச்சரியமே ஆச்சரியமே
கர்த்தராலே எல்லாம் ஆயிற்றே
(3)
மனுஷனை நம்புவதை பார்க்கிலும்
பிரபுக்களை நம்புவதை பார்க்கிலும்
கர்த்தரை நம்புவேன் கர்த்தரை நம்புவேன்
அவரே எனக்காய் எல்லாம் செய்வார்