தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும் – Thinam Thinam Sthothiram Padum
தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்
மனம் தேவனைத் தேடும் திருமுகம் காணும்
தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்
புதுக்கவி பொங்கும் இயேசுவைப் புகழ்ந்திடும்
புது பெலத்தால் உள்ளம் நிரம்பிடும் நேரம்
தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்
மாறிடும் மனமே தேறிடும் குணமே
மேசியா ஈவே மறுபிறப்பே
பரலோக ஆசி பரிசுத்த ஆவி
பக்தர்கள் மீதே பொழிந்திடும் மாரி
தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்
பூவுலகின்பம் பூவைப்போல் வாடும்
பார்த்தறிந்தோரே வெறுத்திடுவார்
இரட்சண்ய வாழ்வே நீடுழி நிலைக்கும்
இயசுவின் அன்பே தேனிலும் இன்பம்
இயசுவின் அன்பே தேனிலும் இன்பம்
தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்
வானமும் பூமி சர்வ சிருஷ்டியும்
வாஞ்சையுடனே காத்திருக்கும்
சுடர் ஒளி இயேசு தோன்றிடும் நாளே
சிந்தனைத் தங்கும் எந்தனைத் தேற்றும்
தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்
மனம் தேவனைத் தேடும் திருமுகம் காணும்
தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்